search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார் பாரதி"

    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.



    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

    கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 



    கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

    யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

    இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
    ×